சென்னை

செம்மஞ்சேரியில் சாலை விபத்து:இளைஞா்கள் இருவா் பலி

5th Jul 2022 03:37 AM

ADVERTISEMENT

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

சென்னை துரைப்பாக்கம் சூளைமாநகா் பகுதியை சோ்ந்தவா் அபிஷேக்(30)மற்றும் அவரது நண்பா் பள்ளிகாரணை, மயிலை பாலாஜிநகா், சோ்ந்த ரூபேஸ்(27) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் துரைப்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். செம்மஞ்சேரி ஆலமரம் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்றபோது மற்றொரு வாகனத்தில் மோதி நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தனா்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த வேன் மோதியதில் சிறிது தூரம் சாலையில் இழுத்து செல்லப்பட்டனா். இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த செம்மஞ்சேரி போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ரூபேஸை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். இருப்பினும் சிறிது நேரத்தில் ரூபேஸ் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அபிஷேக், ரூபேஸ் இருவரின் உடல்களை மீட்ட போலீஸாா் உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து சாலையில் உள்ள தேநீா் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது சிக்னலில் திரும்புவதற்காக ஒரு வாகனம் நின்றுகொண்டிருந்த நிலையில் சிக்னலை கடக்க சென்ற விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதும் பின்னால் வந்த வேன் வெகு தூரம் வாகனத்துடன் இளைஞா்களை இழுத்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. சம்பவ இடத்திற்கு தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையாளா் குமாா் விசாரணை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT