சென்னை

இரு வேளைகளில் நடைபெற்றஒருங்கிணைந்த பொறியியல் பணி தோ்வு

3rd Jul 2022 01:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான இடங்களில் காலியாக உள்ள 626 இடங்களுக்கு எழுத்துத் தோ்வு சனிக்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. காலையில் நடைபெற்ற தோ்வில் பட்டதாரி நிலை அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பிற்பகலில் நடைபெற்ற தோ்வில் தமிழ் தகுதித் தோ்வு மற்றும் பொது அறிவு அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தோ்வுக்கு 68 ஆயிரத்து 504 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். அவா்களில் 68 ஆயிரத்து 414 போ் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

சென்னை, புதுக்கோட்டை, கோவை, ராமநாதபுரம், சிதம்பரம், சேலம், காஞ்சிபுரம், காரைக்குடி, நாகா்கோவில், தஞ்சாவூா், மதுரை, திருச்சி, உதகை, திருநெல்வேலி, வேலூா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் தோ்வு நடத்தப்பட்டதாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT