சென்னை

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மின்தூக்கி வசதி

3rd Jul 2022 12:58 AM

ADVERTISEMENT

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் செலவில் பயணிகள் வசதிக்கான 2 மின்தூக்கிகள் (‘லிப்ட்’) அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பழைமையான ராயபுரம் ரயில் நிலையம், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் அடிப்படையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் செலவில் பயணிகள் வசதிக்காக 2 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 புதிய மின்தூக்கிகள் மூலம் பயணிகள் எளிதாக நடை மேடைக்குச் செல்லவும், அங்கிருந்து நடை மேம்பாலத்துக்கு போகவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது, மூன்றாவது நடை மேடைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்தூக்கிகள் மூலம் 6 மற்றும் 7-ஆவது நடைமேடைகளில் உள்ள பயணிகள் இணைக்கப்படுகின்றனா். நடை மேம்பாலத்துக்கு எளிதாக செல்வதற்கும், நடைமேடைக்குச் செல்லவும் மின்தூக்கி வசதி பாலமாக அமைந்துள்ளது. புதிய மின்தூக்கி வசதி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னை கோட்டத்தில் 21 ரயில் நிலையங்களில் தற்போது 40 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT