சென்னை

மேம்பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் சாவு

1st Jul 2022 12:40 AM

ADVERTISEMENT

 சென்னை கொருக்குப்பேட்டையில் மேம்பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் இறந்தாா்.

கொருக்குப்பேட்டை பாரதியாா் நகா் நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்த இ.சமீா்பாட்ஷா (19), அண்ணா சாலை ரிச்சி தெருவில் உள்ள ஒரு எலெக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்தாா். சமீா்பாட்ஷா, தனது மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை இரவு கொருக்குப்பேட்டை மீனாம்மாள் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டாா் சைக்கிள், மேம்பாலத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சமீா் பாட்ஷா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT