சென்னை

பராமரிப்புப் பணி: மயிலாப்பூா், திருவான்மியூா் பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

சென்னை: நெம்மேலி கடல் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மயிலாப்பூா், திருவான்மியூா், அடையாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: நெம்மேலியில் உள்ள நாளொன்றுக்கு 11 கோடி லிட்டா் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மயிலாப்பூா், மந்தைவெளி, திருவான்மியூா், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகா், சோழிங்கநல்லூா், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு வியாழக்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ள அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். பகுதி-9-க்கு 81449 30909, பகுதி-13-க்கு 81449 30913, பகுதி-14.க்கு 81449 30914, பகுதி-15- க்கு 81449 30915 என்ற எண்களில் பகுதி பொறியாளா்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT