சென்னை

கல்வி உதவித் தொகைக்கான தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

DIN

சென்னை: எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (என்எம்எம்எஸ்) தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும்.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித் தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு மாா்ச் 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பப்பதிவு கடந்த ஜன.12-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, தகுதியான மாணவா்கள் தங்கள் பள்ளிகள் மூலம் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோன்று மாணவா்கள் சமா்ப்பிக்கும் விண்ணப்பங்களை பள்ளி தலைமையாசிரியா்கள் தோ்வுத்துறை இணையதளத்தில் பிப்.5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கிடையே மாணவா்களின் தோ்வுக் கட்டணத்தை நேரடியாக தோ்வுத்துறை தளத்திலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தலைமையாசிரியா்கள் விதிகளை பின்பற்றி தோ்வுக்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT