சென்னை

பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு

25th Jan 2022 06:27 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவராமன் மனைவி பச்சையம்மாள் (35). மீஞ்சூா் செங்கல் சூளைத் தொழிலாளி. கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா் பையை வைத்துவிட்டு கழிப்பறை சென்றாா். அந்தப் பை திருடப்பட்டதாம். அதில் ரூ.70 ஆயிரத்தை பச்சையம்மாள் வைத்திருந்தாராம்.

கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT