சென்னை

பெருங்களத்தூரில் 5 கடைகளில் கொள்ளை

25th Jan 2022 06:28 AM

ADVERTISEMENT

சென்னையை அடுத்த பழைய பெருங்களத்தூரில் மா்ம நபா்கள் 5 கடைகளின் பூட்டை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உடைத்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை முழுஅடைப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இருந்தன. பழைய பெருங்களத்தூா் கலைஞா் சாலையில் உள்ள மளிகைக் கடை, பால் விற்பனைக் கடை உள்ளிட்ட 5 கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 60 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இது தொடா்பாக பீா்க்கன்கரணை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT