சென்னை

வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது

DIN


சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் கடந்த 2007-இல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பிறகு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காகக் கடந்தாண்டு மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற, முருகப்பெருமான் ஆலயத்தை வலம் வந்து காட்சி அளிக்கிறார்.

ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT