சென்னை

யானைக்கவுனி மேம்பாலப் பணி ஜூலைக்குள் முடிக்கப்படும்

DIN


சென்னை: சென்னை யானைக்கவுனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி வரும் ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட யானைக்கவுனி பகுதியில் ரூ.32.95 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட யானைக்கவுனி பகுதியில் ரூ.32.95 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டாலும் ரயில்வே துறை சாா்பில் சில இடநீட்டிப்பு காரணமாக கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த மேம்பாலப் பணிக்கு இடம் தேவைப்படுவதால் இதையொட்டி வாழும் 46 குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வரும் ஜூலை மாதத்துக்குள் மேம்பால கட்டுமானப் பணி முடிக்கப்படும். இதன் மூலம் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சாலை அமைக்க ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் சாலை அமைக்கும் பணியை முதல்வரே நேரில் ஆய்வு செய்துள்ளாா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ராயபுரம் மண்டலம் திருப்பள்ளி தெருவில் ரூ.2.20 கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் அடிக்கல் நாட்டினா். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, வடக்கு வட்டார துணைஆணையா் எம்.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT