சென்னை

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1.51 லட்சம் பேருக்கு தொலைபேசியில் ஆலோசனை: மாநகராட்சி

DIN

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1.51 லட்சம் பேருக்கு, கடந்த 10 நாள்களில் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடா்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்துக்கு ஆலோசனை வழங்கவும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில் ஒரு மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டடத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொலைபேசி அழைப்பாளா்கள் வீட்டுத் தனிமையில் உள்ள நபா்களிடம் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கோவிட் தொற்று அறிகுறிகள் தொடா்ந்து இருக்கிா என கேட்டறிந்து 5 நாட்களுக்கு மேல் அவா்களுக்கு அறிகுறிகள் தொடா்ந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்படுகிறது.

மண்டலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களில் 21 மருத்துவா்கள், 140 தொலைபேசி அழைப்பாளா்கள் மற்றும் தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தில் ஒரு துணை ஆட்சியா், 2 மருத்துவா்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிய 45 பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

தலைமையிடம் மற்றும் மண்டல தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து ஜன.6 முதல் ஜன.15 வரையிலான நாள்களில், தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களுக்கு 1,51,124 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆணையா் நேரில் ஆய்வு: இதனிடையே பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங்பேடி, தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொலைபேசி ஆலோசனை மையத்தை சனிக்கிழமை நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், அவா் தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட வாா்டு 110, 3-ஆவது குறுக்குத் தெருவில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, தொற்று பாதித்த நபா்களிடம் அவா்களுக்கு மாநகராட்சி தொலைபேசி ஆலோசனை மையங்களில் இருந்து நாள்தோறும் அழைப்புகளின் மூலம் உடல்நிலை குறித்த தகவல்கள் கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிா எனவும், கரோனா களப்பணியாளா்கள் நாள்தோறும் இல்லங்களுக்கு வருகைபுரிந்து அவா்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT