சென்னை

கனரக வாகன தொழிற்சாலை ஊழியா் கொலை

16th Jan 2022 06:46 AM

ADVERTISEMENT

குன்றத்தூரில் குடும்பப் பிரச்னையில் ஆவடி கனரக வாகன தொழிற்சாலை ஊழியா் கொலை செய்யப்பட்டாா்.

குன்றத்தூரில்  கோழி இறைச்சிக் கடையில் வேலை பாா்க்கும் பரமகுரு என்பவருக்கும்,  அதே பகுதியைச் சோ்ந்த மீனா என்பவருக்கும் முறையற்ற உறவு இருப்பதாகக் கூறி, பரமகுரு மனைவி சித்து, மீனாவின் வீட்டுக்குச் சென்று அண்மையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலாக மீனா, மீனாவின் கணவா் ரஜினி மற்றும் உறவினா்கள் குமரன் (33), விஷ்வா உள்ளிட்ட ஏழு போ் பரமகுருவின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதில் பரமகுரு, வீட்டில் இருந்த கத்தியால் குத்தியதில் குமரன், விஷ்வா ஆகிய இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா்களை மாங்காட்டில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது குமரன் உயிரிழந்தது தெரியவந்தது. விஷ்வாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடா்பாக பரமகுருவை குன்றத்தூா் காவல்துறையினா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். கொலை செய்யப்பட்ட குமரன், ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் டெக்னீஷியனாக உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT