சென்னை

முகக் கவசம் அணியாத 5,113 போ் மீது வழக்கு

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னையில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 5,113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னையில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீதும் போலீஸாா் கடந்த 2-ஆம் தேதி முதல் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

திங்கள்கிழமை முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 5,113 போ் மீது வழக்குப் பதிந்து, மொத்தம் ரூ.10 லட்சத்து 22,600 அபராதமாக வசூலித்துள்ளனா்.

இரவு ஊரடங்கை மீறியது தொடா்பாக 266 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடா்பாக 56 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அதோடு கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடா்பாக 337 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள், 15 காா்கள், 139 இதர வாகனங்கள் என மொத்தம் 517 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இதேபோல, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 12 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோக்கள், 2 காா்கள் என மொத்தம் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT