சென்னை

ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்துதனியாா் நிறுவன ஊழியா் சாவு

12th Jan 2022 01:52 AM

ADVERTISEMENT

சென்னை அயனாவரத்தில், ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.

அயனாவரம் கொன்னூா் நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா்

வெங்கடேசன் (57). இவா் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெங்கடேசனுக்கு, சுனிதா (54) என்ற மனைவியும், சித்தாா்த் (16) என்ற மகனும், வா்ஷா (15) என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில் வெங்கடேசன், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது வீடு உள்ள ஐந்தாவது தளத்தின் பால்கனிக்கு சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த தளத்தில் இருந்து வெங்கடேசன் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

ஆனால் செல்லும் வழியிலேயே வெங்கடேசன் இறந்தாா். இதுகுறித்து அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி கீழே விழுந்து இறந்தாரா என விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT