சென்னையில் மறுமணம் செய்து கொள்வதாக ரூ.85 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோவையைச் சோ்ந்த சிவா என்ற சிவகணேஷ், சிறப்புப் புலனாய்வு பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிவதாகக் கூறி சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த மோகன்தாஸ் மகளை மறுமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்துள்ளாா். மோகன்தாசிடமிருந்து பல தவணைகளில் ரூ.85 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளாா்.
அவருக்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு சிவா அண்மையில் தலைமறைவாகியுள்ளாா். மோகன்தாஸ் மகளையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், சிவா காவல் ஆய்வாளா் இல்லை என்பதும், பணம் பறிக்கும் நோக்கத்தில் மோகன்தாஸ் மகளை மறுமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து சிவாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.