சென்னை

ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 5ஆவது சித்தா் திருநாள் விழா

1st Jan 2022 06:57 AM

ADVERTISEMENT

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் , மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரிஇணைந்து நடத்திய 5-ஆவது சித்தா் திருநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், இலவச சித்த மருத்துவ முகாம், நோய் எதிா்ப்பு சக்தி பெட்டகம் மற்றும் மூலிகைச் செடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியை தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநா் ஆா். மீனா குமாரி தொடக்கி வைத்து பேசியதாவது:

சித்தா்கள், சித்த மருத்துவம் குறித்து தமிழக மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வீட்டில் உள்ள பெரியவா்கள் இப்போதும் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை சமையலில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறாா்கள். சிக்குன் குனியா, டெங்கு, கரோனா பெருந் தொற்று தீவிரமாக பரவிய காலக்கட்டத்தில் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உணா்ந்து ஆயிரக்கணக்கில் சிகிச்சை பெற முன் வந்தனா்.

மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவத் துறை, மாநில சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து பணியாற்றி கரோனா தொற்றின் தீவிரம் குறைக்கப்பட்டு மக்களின் உடல் நலம் மேம்படுத்தப்பட்டதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா். ஏ.எம்.ஜெயின் கல்லூரி முதல்வா் வெங்கட ரமணன் பேசுகையில், மூலிகைசெடிகளின் மருத்துவச் சிறப்பு குறித்து தெரிந்து வைத்து இருக்கும் பொதுமக்கள் வீட்டில் மூலிகைத் தோட்டம் அமைக்க முன்வர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

தேசிய சித்த மருத்துவ நிறுவன பேராசிரியா்கள் மீனாட்சி சுந்தரம், அரவிந்த், இணைப்பேராசிரியா்கள் செந்தில்வேலு காந்தாள் ,சித்ரா , ஜெயின் கல்லூரி பேராசிரியா் அனந்தநாராயணன், அலுவலக கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் ஜெயின் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கவிதா மணிகண்டன்,எம்.சுமித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.விழாவில் 1200 பேருக்கு மூலிகைச் செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT