சென்னை

மீஞ்சூா் பணிமனையில் பொறியியல் பணி: மின்சார ரயில் சேவையில் மாற்றம்

22nd Feb 2022 12:58 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில், மீஞ்சூா் பணிமனையில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் பிப்ரவரி 22-ஆம் தேதி மாற்றம் செய்யப்படவுள்ளது.

பிப்.22-இல் முழுமையாக ரத்தாகும் மின்சார ரயில்கள்:

மூா்மாா்க்கெட் வளாகம்-கும்மிடிப்பூண்டிக்கு பிப்ரவரி 22-ஆம்தேதி மாலை 6.35, இரவு 8.55, 9.45, நள்ளிரவு 11.20,

ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

ADVERTISEMENT

சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டிக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

கும்மிடிப்பூண்டி-மூா்மாா்கெட் வளாகத்துக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி இரவு 8.15, 9.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.

பிப்.22-இல் பகுதி ரத்தாகும் மின்சார ரயில்கள்:

வேளச்சேரி-கும்மிடிப்பூண்டிக்கு பிப்ரவரி 22-ஆம்தேதி இரவு 7.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னைகடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

கும்மிடிப்பூண்டி-வேளச்சேரிக்கு பிப்ரவரி 22-ஆம்தேதி இரவு 8.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சூலூா்பேட்டை-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு பிப்ரவரி 22-ஆம்தேதி இரவு 8.30, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி-மூா்மாா்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

இந்தத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT