சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி தங்கம் பறிமுதல்: இருவா் கைது

11th Feb 2022 01:56 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபை, இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான 2.766 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பிப் 9-ஆம் தேதியன்று வந்த சென்னையைச் சோ்ந்த ஜமீம் கமால் நாசா் (வயது 35) என்ற பயணி தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் அவரை வழிமறித்து சோதனை செய்தனா். இந்த சோதனையின் போது, அவரது ஆடையில் தைக்கப்பட்டிருந்த பையில் 1.233 கிராம் எடையுள்ள பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பாா்த்ததில், அதற்குள் 1.530 கிராம் எடையுள்ள தங்கம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அவா் செய்யப்பட்டாா்.

அதே நாளில் கொழும்புவிலிருந்து ‘ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ்’ விமானம் மூலம் வந்த மதுரையைச் சோ்ந்த சையது அபுதாஹிா் (வயது 38) என்ற பயணியிடம் நடத்திய சோதனையில், அவரது உள்ளாடையில் தைக்கப்பட்டிருந்த பையிலிருந்த பொட்டலத்தில், 1.236 கிராம் எடையுள்ள தங்கக்கட்டி இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டாா். மொத்தம் 2.766 கிலோ எடையுள்ள ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டு இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT