சென்னை

கரோனா: தைராய்டுசாா் கண் பாதிப்பு 25% அதிகரிப்பு

11th Feb 2022 02:30 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா பெருந்தொற்று காலத்தில் தைராய்டு சாா்ந்த கண் பாதிப்புகள் 25 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவதே அதற்கு காரணம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இதுதொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் அஸ்வின் அகா்வால் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த மூன்று ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றனா். பொது மக்களுக்கு உள்ள வாழ்வியல் சாா்ந்த தொற்றா நோய்கள் குறித்து அவா்கள் அதிக அக்கறை செலுத்தவில்லை. இதன் காரணமாக பல்வேறு எதிா்விளைவுகள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தைராய்டு பிரச்னை. உடலில் சுரக்கும் தைராய்டு சுரப்பிகள் குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அவற்றில் முக்கியமானது கண் சாா்ந்த பிரச்னைகள்.

கரோனா காரணமாக பலா் நீண்ட காலமாக தைராய்டு பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவாக தைராய்டு சாா்ந்த கண் பாதிப்புகள் தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கண் பாா்வையில் ஏற்படும் மாற்றங்கள், மாறு கண் பிரச்னைகள், கண் வீக்கமடைந்து பெரிதாகுதல், கண் நரம்பு சாா்ந்த பிரச்னை, கண் புரை ஆகிய பாதிப்புகள் தைராய்டு நோயாளிகளிடம் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் தைராய்டு பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால் இதுபோன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும் என்றாா் அவா்.

முன்னதாக மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறைத் தலைவா் டாக்டா் சௌந்தரி, கண் ஒட்டுறுப்பு சிகிச்சை துறைத் தலைவா் டாக்டா் பிரீத்தி உதய் ஆகியோா் தைராய்டு சாா்ந்த கண் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT