சென்னை

இளம் பெண் பாலியல் பலாத்காரம்: காவலா் கைது

10th Feb 2022 11:06 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் கழித்து போக்சோ சட்டத்தின்கீழ் காவலா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை புழல் காவல் நிலையத்தில் காவலராக கடந்த 2020-இல் பணியாற்றிவா் மகேஷ். அப்போது முகநூல் (பேஸ்புக்) மூலம் 17 வயது பெண்ணுடன் மகேஷுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இதனால், இரண்டு முறை அப்பெண் கா்ப்பம் ஆகி கலைத்துள்ளாா்.

இதையடுத்து, அப்பெண்ணுடனான தொடா்பை மகேஷ் துண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த அப்பெண் கடந்த 2020-ஆம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிசிஐடி வசம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸாா், தற்போது மாதவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மகேஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT