சென்னை

அம்பத்தூரில் காணாமல்போன குழந்தை கோயம்பேட்டில் மீட்பு

10th Feb 2022 12:49 AM

ADVERTISEMENT

சென்னை அருகே அம்பத்தூரில் காணாமல்போன குழந்தை கோயம்பேட்டில் மீட்கப்பட்டது.

அம்பத்தூா் காந்தி நகா், வட்டாட்சியா் அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கிஷோா், அவா் மனைவி புத்தினி தங்கி வேலை செய்து வருகின்றனா். குழந்தைகள் ஆகாஷ் (8), பிரகாஷ் (6), துா்கி (5), லாக்டவுன் (ஒன்றரை வயது) ஆகிய 4 நால்வருடன் அங்கு வசித்து வந்தனா்.

கரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை பிறந்ததால், கிஷோா் தம்பதியா் அந்த குழந்தைக்கு ‘லாக் டவுன்’ என பெயரிட்டுள்ளனா். இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி கிஷோா் தங்கியிருந்த குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ‘லாக் டவுன்‘ திடீரென மாயமானது.

அம்பத்தூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி வந்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்துக்குப் புறப்படும் பேருந்தின் பின்புறம் சீட்டில் ஒரு ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

ADVERTISEMENT

இதைக் கவனித்த பேருந்து நடத்துநா் கோவிந்த ராமானுஜம், குழந்தையை மீட்டு கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா், விசாரணையில் அந்த குழந்தை லாக்டவுன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், குழந்தை லாக்டவுனை பெற்றோரிடம் உடனடியாக ஒப்படைத்தனா். கடத்தல்காரா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT