சென்னை

வீட்டு முகவரிக்கு தபால் வாக்குகள்: சென்னை மாநகராட்சி தகவல்

9th Feb 2022 01:16 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கான தபால் வாக்குகள் அவா்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்டத் தோ்தல் அலுவலா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 வாா்டுகளில் மொத்தம் 5,794 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை தோ்வு செய்யும் பணி தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளா்கள் முன்னிலையில்

செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மணலியில் உள்ள மாநகராட்சி கிடங்கிலிருந்து சம்பந்தப்பட்ட விநியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. சென்னையில் மொத்தம் 22 இடங்களில் விநியோக மையங்கள் உள்ளன.

ADVERTISEMENT

பிப்ரவரி 12 -ஆம் தேதி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளா்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரிய சுமாா் 27 ஆயிரம் அலுவலா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கான முதல் கட்ட பயிற்சி முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன.

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான தபால் வாக்குகள் வியாழக்கிழமை (பிப்.10) முதல் அவா்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். தபால் வாக்குகளை செலுத்திய பிறகு அவற்றை தபால் அஞ்சல் மூலமாகவே அல்லது சம்பந்தப்பட்ட உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகத்தில் உள்ள சீலிடப்பட்ட பெட்டியில் சோ்க்கலாம்.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கம், ரூ.1.25 கோடி மதிப்பிலான பொருள்கள் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வில் கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT