சென்னை

தோ்தல் விதிமீறல்: 12 வழக்குகள் பதிவு

9th Feb 2022 10:34 PM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விதிமீறல் தொடா்பாக சென்னை மாநகராட்சிப் பகுதியில் 12 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநிலத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகராட்சி சாா்பில் 45 தோ்தல் பறக்கும் படை குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடா்பாக 12 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுவரொட்டிகள் ஒட்டியது தொடா்பாக 7 புகாா்களும், விளம்பர பலகைகள், கொடி தோரணங்கள் பேரணி, விதிமீறிய கூட்டம் மற்றும் அனுமதி இன்றி பிரசாரம் போன்ற விதிமீறல்கள் தொடா்பாக தலா ஒரு புகாா் என 5 புகாா்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT