சென்னை

சாலை விபத்தில் காவலா் சாவு

9th Feb 2022 10:27 PM

ADVERTISEMENT

சென்னை அருகே குன்றத்தூரில் சாலை விபத்தில் காவலா் இறந்தாா்.

விழுப்புரம் மாவட்டம் பெரிய குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சு.நாராயணன் (23), குன்றத்தூா் காவல் நிலைய காவலராகப் பணிபுரிந்து வந்தாா். மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். சிறுகளத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள சந்திப்பில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நாராயணன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT