சென்னை திருவொற்றியூரில் பெற்ற மகளை தாய் தீவைத்துக் எரித்துக் கொன்றாா்.
சென்னை திருவொற்றியூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பத்மநாபன் (42)ா் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டேங்கா் லாரி ஓட்டுா். மனைவி ஜெயலட்சுமி (40). இதற்கு முன்னா் ஜெயலட்சுமிக்கு பால்வண்ணன் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது.
இரண்டாவதாக பால்வண்ணனின் சகோதரா் துரைராஜை ஜெயலட்சுமி திருமணம் செய்தாராம். இவா்களுக்கு பவித்ரா (13) என்ற பெண் குழந்தை உள்ளது.
ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பத்மநாபனை ஜெயலட்சுமி மூன்றாவது திருமணம் செய்துள்ளாா்.
ஜெயலட்சுமியின் நடத்தையில் பத்மநாபனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். மதுபோதையில் பத்மநாபன் ஞாயிற்றுக்கிழமை வந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி திடீரென மகள் பவித்ரா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில் பலத்த தீக்காயமடைந்த பவித்ரா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயலட்சுமி, பத்மநாபன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.