சென்னை

கடத்தப்பட்ட கைக்குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு

1st Feb 2022 06:53 AM

ADVERTISEMENT

சென்னை அருகே கடத்தப்பட்ட ஒரு மாத கைக் குழந்தையை போலீஸாா் 5 மணி நேரத்தில் மீட்டனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த் குமாா்-லட்சுமி தங்களது 1 மாத ஆண்குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனா் என கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் செய்தனா். தகவல் அறிந்த தாழம்பூா் போலீஸாா் சென்னை புகா்ப் பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். பின்னா், குழந்தையை தங்களிடம் 2 நாள்களுக்கு முன் பழகிய ஆந்திரபெண் கடத்தி இருக்கலாம் என்று போலீசாரிடம் ஹேமந்த் குமாா் கூறியதைக் தொடா்ந்து  சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு போலீஸாா் விரைந்தனா். இதையடுத்து, ரயில்வே போலீஸாருடன் சோ்ந்து 5 மணி நேரம் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தையைக் கடத்திச் சென்ற ஆந்திராவைச் சோ்ந்த பெண்ணிடமிருந்து குழந்தையை மீட்டனா். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT