சென்னை

பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பார்வையிட்டார் ஸ்டாலின்

30th Dec 2022 01:06 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

மு.க. ஸ்டாலின் இன்று (30.12.2022) பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை பார்வையிட்டார்.

இதையும் படிக்க.. முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: குற்றவாளிகள் சிக்கியது எப்படி? 

தமிழ்நாடு அரசின் “181 மகளிர் உதவி மையம்” பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம் குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன. 181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது.

ADVERTISEMENT

மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.

இதையும் படிக்க.. பிரபல நடிகையை சுட்டுக் கொன்று நாடகமாடிய கணவர்: காட்டிக்கொடுத்த குழந்தை

பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை பார்வையிட்டு, கீழ்க்காணும் “பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி” விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.

“பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்!  பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம்!” என்று மு.க. ஸ்டாலின் எழுதி கையெழுத்திட்டார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT