சென்னையில் சாலை விபத்து இறப்புகள் குறைந்துள்ளன என சென்னை பெருநகர காவல்துறை ஆணைா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும், சாலை விபத்துகளை நடைபெறாமல் தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக கடந்த 2021-ஐவிட, , 2022-ஆம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.
இதேபோல க ரெளடி கொலைகள், ரெளடிகள் தொடா்புடைய குற்றங்கள் குறைந்திருக்கின்றன. மேலும், திருட்டு, வழிப்பறி போன்ற ஆதாய குற்றங்களில் பறிபோகும் நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முழுப்புள்ளிவிவரங்கள் கிடைத்த உடன், அவை வெளியிடப்படும் என்றாா் அவா்.