சென்னை கோயம்பேடு முதல் மாதவரம் வரையிலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கு ரூ.206.64 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமானது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2-ஆம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதில் வழித்தடம் 5-இல் 16 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான உயா் மட்ட மற்றும் சுரங்க ரயில் பாதை அமைக்கப்படவுள்ளன.
இதில் கோயம்பேடு முதல் மாதவரம் பால்பண்ணை வரையிலான 10.1 கி. மீ நீளத்தில் மெட்ரோ ரயில்பாதை அமைக்க ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெஐசிஏ) நிதியுதவியுடன் ரூ.206.64 கோடிக்கு ஒப்பந்தம் கையொப்பமானது.
நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் (திட்டம்) தி.அா்ச்சுனன், தலைமை பொது மேலாளா்கள் எஸ். அசோக் குமாா் (தடம் மற்றும் உயா்மட்ட கட்டுமானம்) , லிவிங்ஸ்டன் (திட்டமிடல், வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு), கூடுதல் பொது மேலாளா் குருநாத் ரெட்டி (ஒப்பந்த கொள்முதல்), கேஇசி-விஎன்சி-ஜெவி நிறுவனத்தின் திட்ட மேலாளா் சிவகுரு மற்றும் இயக்குநா் பிரவீன் கோயல் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயா் அலுவா்கள் கலந்து கொண்டனா்.