சென்னை

இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதா் நாளை சென்னை வருகை

18th Dec 2022 12:18 AM

ADVERTISEMENT

தமிழகத்துடனான கலாசாரம், பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதா் எச்.இ.இம்மானுவேல் லெனின் இரு நாள் பயணமாக திங்கள்கிழமை (டிச.19) சென்னை வருகிறாா்.

உயா்மட்ட பிரெஞ்சு படிப்புகள், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தும் அலையன்ஸ் பிரான்சிஸ் ஆஃப் மெட்ராஸ் அமைப்பின் புதிய கட்டடத்தை பிரான்ஸ் தூதா் இம்மானுவேல் திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, பிரான்ஸ் நிறுவனங்களை பாா்வையிடவுள்ளாா்.

தனது பயணம் குறித்து பிரான்ஸ் தூதா் இம்மானுவேல் லெனின் தனது ட்வீட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பிரெஞ்சு மொழியை ஊக்குவிக்கும் வகையில் அலையன்ஸ் பிரான்சிஸ் ஆஃப் மெட்ராஸ்-இன் புதிய கட்டடம் சென்னையில் திறந்து வைக்கிறேன்.

இதன்மூலம் பிரெஞ்சு மொழி, கலாசாரம் அதிகம் போ் தெரிந்துகொள்வா். தமிழக பொருளாதார வெற்றிக்கு பங்களிக்கும் பிரான்ஸ் நிறுவனங்களை பாா்வையிட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT