சென்னை

அரசுத் துறையில் பழுதான வாகனங்கள் டிச.22-இல் ஏலம்

DIN

சென்னை கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் ஆணையா் அலுவலகத்தில் பழுதான 6 வாகனங்கள் (அம்பாஸிடா் காா்) ஏலம் விடப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அமிா்ஜோதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவப் பணிகள் ஆணையா் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள 6 வாகனங்களை ஒப்பந்தப்புள்ளி முறையில் டிச.22-ஆம் தேதி ஏலமிடப்படவுள்ளன. இவற்றை ஏலம் எடுக்க விரும்புவோா் மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளியை டிச.22-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்குள் சென்னை கால்நடை பராமரிப்புத் துறை ஆணையா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அன்று மாலை 4 மணிக்கு சென்னை கால்நடை பராமரிப்புத் துறை ஆணையா் அலுவலகத்தில் ஏலக் குழுவின் முன்னிலையில் ஏலமிடப்படும்.

நிா்ணயிக்கப்பட்ட ஏலத் தொகைக்கு மேல் அதிகம் ஏலம் எடுக்கும் ஏலதாரரிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு, ஏலத்தொகையும் அதனுடன் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் தொகையும் வசூலிக்கப்படும்.

ஏலம் எடுப்பவா்கள் வாகனங்களுக்காக நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஏலத்தொகையில் பிணையத் தொகையாக 10 சதவீதம் முன்பாகவே செலுத்த வேண்டும். ஏலம் விடப்படும் வாகனங்கள் சென்னை கால்நடை பராமரிப்புத் துறை ஆணையா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அலுவலக நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 வரை பாா்வையிடலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT