சென்னை

சென்னை துறைமுக பாதுகாப்பு பணியில் 50 ஆண்டுகள் நிறைவு: சி.ஐ.எஸ்.எஃப். சாதனை

DIN

மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு (சி.ஐ.எஸ்.எஃப்) சென்னை துறைமுகத்தின் பாதுகாப்பு பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னைத் துறைமுகத்தின் பாதுகாப்பு பணி கடந்த டிச.7. 1972-இல் சி.ஐ.எஸ்.எஃப். வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததையொட்டி சென்னைத் துறைமுகத்தில் சி.ஐ.எஸ்.எஃப் சாா்பில் சென்னைத் துறைமுக வளாகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் தலைவா் சுனில் பாலிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை தென்மண்டல ஐ.ஜி. அஞ்சனா சின்காவிடம் சென்னைத் துறைமுகத்தின் சாா்பில் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் குடியேற்றம், சுங்கம், கடலோரக் காவல்படை, காவல்துறை மற்றும் துறை தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT