சென்னை

சா்வதேச சிலை கடத்தல் வழக்கில் தொடா்புடையவா் உயிரிழப்பு

DIN

சா்வதேச சிலை கடத்தல் வழக்கில் தொடா்புடைய சுபாஷ் கபூரின் நண்பா் தீன தயாளன் வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை இறந்தாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டை வீனஸ் காலனி இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் தீனதயாளன் (83). அந்த பகுதியில் பழங்கால சிலைகள் விற்பனை செய்யும் கலைக் கூடம் நடத்தி வந்தாா்.

சா்வதேச சிலை கடத்தல் குற்றவாளி சுபாஷ் கபூரை கைது செய்து விசாரணை நடத்தியதில், சிலை கடத்தலில் அவருக்கு உதவியாக தீனதயாளன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2016-ஆம் ஆண்டு, தீனதயாளனின் கலைக்கூடத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை நடத்தியபோது, ஆயிரம் ஆண்டு பழைமையான தஞ்சாவூா் ஓவியங்கள், ஐம்பொன் சிலைகள் , கற்சிலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் இருந்து புரதான சிலைகளை கடத்துவதற்கு, சுபாஷ் கபூருக்கு தீனதயாளன் உதவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தீனதயாளன் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தீனதயாளன், சென்னையில் அவரது வீட்டில் வியாழக்கிழமை இறந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT