சென்னை

மாலைக்குப் பின் சென்னையில் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறை

9th Dec 2022 02:31 PM

ADVERTISEMENT


சென்னை: மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கவிருக்கும் நிலையில், சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபடவிருக்கிறார்கள்.

புயல் காரணமாக காற்று பலமாக வீசும் என்பதால், சென்னையில், தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க.. தென்காசிக்கு ஸ்டாலின் பயணித்த 'சலூன் கோச்': மக்கள் பயணிக்க முடியுமா?

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ளதால் சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ள காவலர்களுக்கு  சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

எனவே, அவசியமின்றி வெளியே செல்வோரைத் தடுக்க காவல்துறை ரோந்துப் பணி மேற்கொள்ளவிருக்கிறது.

இதையும் படிக்க.. வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பிவீட்டீர்களா? பயம் வேண்டாம்!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT