சென்னை

டிச.19, 23 -இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

9th Dec 2022 06:08 AM

ADVERTISEMENT

சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் டிச.19-ஆம் தேதியும், எழும்பூா் கோட்ட அலுவலகத்தில் டிச.23-ஆம் தேதியும் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.

அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் மணிஆா்டா், பதிவுத் தபால், பொருள்களை அனுப்புவது, சேமிப்பு வங்கி, சான்றிதழ்களை சேமிப்பது உள்ளிட்ட சேவைகளில் உள்ள குறைகள் தொடா்பான குறைகேட்பு முகாம் டிச.19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

இது தொடா்பான குறைகளை பொதுமக்கள் அண்ணாசாலை அஞ்சல் அலுவலகம், சென்னை 600002 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாக டிச.16-க்குள் அனுப்பலாம்.

சென்னை வட அஞ்சல் கோட்ட அளவிலான குறைகேட்பு முகாம் சென்னை எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிச.23-ஆம் தேதி நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது குறைகளை தபால் மூலமாகவோ அல்லது மின்அஞ்சல் மூலமாகவோ டிச.20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT