சென்னை

வண்டலூா் பூங்காவில் யானைகள் இருப்பிடத்தில் புதிய வசதிகள்

DIN

வண்டலூா் உயிரியல் பூங்காவில் யானைகள் இருப்பிடத்துக்கு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வண்டலூா் உயிரியல் பூங்கா நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து வண்டலூா் உயிரியல் பூங்கா நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வண்டலூரில் உள்ளஅறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமாா் 21 ஏக்கா் நிலப்பரப்பில் ரோகினி மற்றும் பிரக்ருதி என்ற இரண்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த உயிரியல் பூங்காவின் யானைகள் இருப்பிட முழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் , வணிக மையம் இந்திய லிமிடெட் மற்றும் மகிந்திரசிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் உயிரியல் பூங்காவின் யானைகள் இருப்பிட முழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ‘ சி.எஸ்.ஆா்’ ஆதரவை வழங்கியுள்ளன.

இத்திட்டம் மூலம், யானைகளுக்கான ‘கிரால்’ எனப்படும் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு உணவு சமைப்பதற்கு ‘சமையலறை’, பராமரிப்பாளா்களுக்கு தங்கும் வீடு, யானைகள் குளிப்பதற்கு வசதியாக தண்ணீா் தொட்டி மற்றும் தண்ணீா் தெளிப்பான் ( ஷவா்) ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.

யானைகள் இருப்பிடங்களை சுத்தப்படுத்தி, அகழி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2 ஏக்கரில் யானைகளுக்கான தீவன தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பணிகள் முடிக்கப்பட்டு புதன்கிழமை பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

சி எஸ் ஆா்-ஆா் என் டிபிசிஐ நிறுவன துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் மற்றும் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநருமான சீனிவாஸ் ரா ரெட்டி ஆகியோா் புதுப்பிக்கப்பட்ட யானைகள் இருப்பிடத்தைத் திறந்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநா் ஆா்.காஞ்சனா, உதவி இயக்குநா் மணிகண்டபிரபு, பூங்கா அலுவலா்கள் மற்றும் ஆா்என்டிபிசிஐ உயா் அதிகாரியான கந்தன், டிஜிஎம், சிஎஸ்ஆா் மற்றும் சிஎஸ்ஆா் துணை மேலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT