சென்னை

சென்னையை நெருங்கும் புயல்! மெரினாவில் கடல் சீற்றம்

8th Dec 2022 10:54 AM

ADVERTISEMENT

 

மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், மெரினா கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் வலுப்பெற்றது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளதால் கரையை கடக்கும் நேரத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க | மாண்டஸ் புயலின் நகரும் வேகம் குறைந்தது: கரையை கடப்பதில் தாமதம்?

தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், சென்னை மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து, கடலில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது.

மாண்டஸ் புயல் நாளை(டிச.9) இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை நள்ளிரவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில்  மிக கனமழை பெய்யும் எனவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT