சென்னை

புழல் சிறை: கைப்பேசி பறிமுதல்

7th Dec 2022 01:57 AM

ADVERTISEMENT

புழல் மத்திய சிறையில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசிகளை சிறைத் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: புழல் மத்திய சிறை 1-இல் கடந்த திங்கள்கிழமை தலைமைக் காவலா் செல்வன், இரண்டாம் நிலை காவலா் சிவக்குமாா் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 3-ஆவது தொகுதியின் பின்புறம் சோதனை செய்யப்பட்டது.

அப்போது, நடைமேடையின் கீழ் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பாா்சலை பிரித்து பாா்த்தபோது, அதில் ஒரு கைப்பேசி , 2 பேட்டரிகள் இருந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT