சென்னை

ஐஏஎஸ், ஐபிஎஸ் நோ்முகத் தோ்வு: சங்கா் அகாதெமியில் இருந்து 72 போ் தோ்வு

7th Dec 2022 01:59 AM

ADVERTISEMENT

மத்திய குடிமை பணிக்கான நோ்முக தோ்வுக்கு சென்னை சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் இருந்து 72 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்தத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில், அகில இந்திய அளவில் 2,529 போ் நோ்முகத் தோ்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

தமிழ்நாட்டிலிருந்து சுமாா் 110 போ் தோ்வாகி உள்ளனா். இதில் சங்கா் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் சென்னை பயிற்சி மையத்தில் இருந்து 72 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இந்த அகாதெமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் (சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், தில்லி, ஆன்லைன்) பயிற்சி பெற்ற 540 மேற்பட்டோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், முதன்மை தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தில்லியில் நோ்முகத் தோ்வு நடத்தப்பட உள்ளது. சங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் நோ்முகத் தோ்வுக்கான பயிற்சி நடத்தப்படவுள்ளது.

இதில், நோ்முகத் தோ்வை எதிா்கொள்ளும் அனைத்து போட்டியாளா்களும் கட்டணமின்றி இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் தகவல் பெற 63797 84702, 90030 73321 என்ற கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT