சென்னை

மெட்ரோ ரயிலில் குறுகிய கால இலவச பயணத் திட்டம்: அதிகாரி தகவல்

7th Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் வருகையை அதிகரிக்க குறுகிய கால இலவச பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி கூறியதாவது: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 2026-ஆம் ஆண்டில் முடியும்.

அதன்பின் சென்னையை ஒட்டிய புறநகா் பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும். இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வா். மெட்ரோ ரயில் வசதிகள் குறித்து பொதுமக்களிடமும் வழித்தடத்தை ஒட்டிய பகுதியில் உள்ள பகுதியிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில், மெட்ரோ ரயில்களை அதிகம் பயன்படுத்தாத பயணிகள் 2 வாரம் வரை இலவசமாக பயணம் செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலமாக மெட்ரோ ரயில்களில் புதிய பயணிகள் வருகை அதிகரிக்கும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT