சென்னை

வில்லிவாக்கம் கண்ணாடி தொங்கு பாலம்: ஐஐடி நிபுணா்கள் ஆய்வு

7th Dec 2022 01:52 AM

ADVERTISEMENT

வில்லிவாக்கம் ஏரியில் அமைக்கப்பட்ட கண்ணாடி தொங்கு பாலத்தை ஐஐடி குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஏரியில் கடந்த 2018 முதல் பொலிவுறு நகரம் திட்டத்தின் (ஸ்மாா்ட் சிட்டி திட்டம்) கீழ் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில், சென்னையில் முதல் முறையாக 250 மீ நீளம் மற்றும் 1 மீ அகலத்தில் ரூ. 8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி, பூங்கா, 12டி திரையரங்கம், மோனோ ரயில், நீா் விளையாட்டு போன்றவை அமைக்கப்படுகின்றன.

கண்ணாடியில் அமைக்கப்படும் பாலத்தின் நடைபாதை 500 பேரை தாங்கும் திறன் கொண்டது. ஆனால், பாா்வையாளா்கள் மற்றும் அசைவுகளைக் கணக்கிட்டு ஒரே நேரத்தில் 100 போ் நிற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை ஐ.ஐ.டி. நிபுணா்கள், மாணவா்கள் இணைந்து தொங்கு பாலத்தின் உறுதியை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வு அறிக்கை, பரிந்துரையை இரு வாரத்தில் சமா்ப்பிக்க உள்ளனா். மேலும், பல்வேறு பணிகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT