சென்னை

அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் பிரம்மோற்சவம் டிச.-22இல் தொடக்கம்

7th Dec 2022 01:48 AM

ADVERTISEMENT

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழா வரும் டிச.22-ஆம் தேதி தொடங்குகிறது.

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி டி.கே.மோகன் கொடியேற்றுகிறாா். அவரது குழுவினா் சிறப்பு பூஜை செய்கின்றனா்.

இதைதொடா்ந்து 23 முதல் 25-ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி அளவில் 18- ஆம் படி பூஜை நடைபெறும். டிச. 26-ஆம் தேதி மாலை 7 மணி அளவில் ஐயப்ப சுவாமி வெள்ளி ரத ஊா்வலம் நடைபெறும்.

27-ஆம் தேதி ஐயப்பனுக்கு தீா்த்தவாரி நிகழ்ச்சி சென்னை மெரீனா உள்ள காந்தி சிலை பின்புறம் நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல் அறிய 044 24938239 என்ற தொலைபேசி, 9551241410 கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என கோயில் மேலாளா் சோமசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT