சென்னை

ஓட்டுநர் இல்லா மெட்ரோ: அதிநவீன சிக்னலுக்கு ரூ. 1,620 கோடியில் ஒப்பந்தம்

6th Dec 2022 04:12 PM

ADVERTISEMENT

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க ரூ. 1,620 கோடி மதிப்பில் அதிநவீன சமிக்ஞை(சிக்னல்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைந்த பின், ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தானியங்கி ரயில்களை இயக்க தேவையான சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு காணொளி மேலாண்மை போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதற்கான ஒப்பந்த புள்ளியை, ஹிட்டாச்சி நிறுவனத்திற்கு ரூ. 1,620 கோடிக்கு மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

சிக்னல், ரயில் கட்டுப்பாடு மற்றும் காணொளி மேலாண்மை அமைப்பினை வடிவமைத்து, உற்பத்தி செய்து, நிறுவி, சோதித்து செயல்படுத்தும் பணியை ஹிட்டாச்சி நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்மூலம், குறைந்தபட்ச இடைவெளியான 1 நிமிடம் 30 வினாடிகளில் தானியங்கி முறையில் ரயில்களை இயக்க முடியும். பணிமனைக்குள் ரயில்கள் வந்து செல்வதும், நடைமேடை தடுப்பு கதவுகளின் செயல்பாடு, பயணிகளுக்கான தகவல் மற்றும் காட்சி அமைப்புகளுடனும் ஒருங்கிணைக்கப்படும். இந்த அமைப்பு, மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் இயக்க கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டுப்பாட்டு சிக்னல் ஆகியவற்றை உடன்நிகழ்வு நேரத்தின்படி காணொளியை காட்சிப்படுத்த வகை செய்கின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT