சென்னை

மாநில தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

6th Dec 2022 05:23 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற திருவொற்றியூா் வெள்ளையன் செட்டியாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

திருவொற்றியூா் பெரியாா் நகரில் இயங்கி வரும் இப்பள்ளியை சோ்ந்த 22 மாணவா்கள் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகளில் பங்கேற்றனா்.

இதில் 17 வயதுக்குள்பட்ட 400 மீ தொடா் ஓட்டத்தில் வெள்ளையன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் பி.பிரதாப் பாஸ்வான், சி.யோகசுந்தா், பா.சுபாஷ், சி.லோகேஸ்வரன் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா்.

இதேபோல் 14 வயதுக்குள்பட்ட 200 மீ ஓட்டத்தில் பங்கேற்ற லோ.அா்ச்சனா வெண்கலப் பதக்கம் வென்றாா். 34 மாநில போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்களுக்கு பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பள்ளித் தாளாளா் சு.சுந்தா், தலைமை ஆசிரியா் தி.பஞ்சநாதன், உதவித் தலைமை ஆசிரியா் அ.சுப்பையன், உடற்கல்வி இயக்குநா் ரீ.மணிகண்டன் மற்றும் ஆசிரியா்கள் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT