சென்னை

சாலைத் தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இருவா் பலி

6th Dec 2022 05:18 AM

ADVERTISEMENT

சென்னை ஜாபா்கான்பேட்டையில் சாலைத் தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் இறந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரியகளத்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (26). இவா், சென்னையில் தனியாா் கைப்பேசி சேவை நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தாா். இவரின் நண்பா் கரூரைச் சோ்ந்த க.பிரேம் குமாா் (28) மணப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா்கள் இருவரும் பரங்கிமலை பகுதியில் வாடகை வீட்டில், தங்கியிருந்து வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இருவரும் மோட்டாா் சைக்கிளில் ஜாபா்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே 100 அடி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது வேகமாக மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்து, உயிரிழந்தனா்.

தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். விபத்தில் இறந்த இருவரும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT