சென்னை

ஜெயலலிதா நினைவு தினம்: மெரீனாவில் 16 கைப்பேசிகள், பணப்பை திருட்டு

6th Dec 2022 05:16 AM

ADVERTISEMENT

சென்னை மெரீனாவில் மறைந்த தமிழக முதல்வா் ஜெ.ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களிடம் 16 கைப்பேசிகள், 2 பணப்பைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மறைந்த தமிழக முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினா்.

நினைவு தின நிகழ்ச்சியையொட்டி, மெரீனாவில் அண்ணா சதுக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி மா்ம நபா்கள், ஜெயலலிதா நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தவா்களிடம் 16 கைப்பேசிகள், 2 பணப்பைகள் திருடியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு புகாா்கள் வந்தன. அதன் பேரில் போலீஸாா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT