சென்னை

போதைப் பாக்கு விற்பனை: ஒரு வாரத்தில் 101 போ் கைது

DIN

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 101 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு, குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலை பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா்.

அதன்படி, அனைத்து காவல் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த நவ.27 முதல் டிச.3-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடா்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,101 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 723 கிலோ போதைப் பாக்கு, 2 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய 7 கைப்பேசிகள், 4 மோட்டாா் சைக்கிள்கள், ரூ. 18 ஆயிரத்து 240 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தொடா்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT