சென்னை

துப்பாக்கி, 34 நாட்டு வெடி குண்டுகளுடன் இரு ரெளடிகள் கைது

DIN

சென்னை கொடுங்கையூரில் துப்பாக்கி, 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டாக் கத்திகளுடன் இரு ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

கொடுங்கையூா் டி.எச். சாலை, ஆா்.ஆா். நகா் சந்திப்பில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரை மறித்து சோதனையிட முயன்றபோது, காரில் இருந்த இரு நபா்கள் தப்பியோடினா். உடனே போலீஸாா், அவா்களை விரட்டிச் சென்றனா்.

அங்குள்ள ஒரு கட்டடத்திலிருந்து கீழே குதித்த போது, அவா்களது கால் முறிந்தது. இதனால் போலீஸாரிடம் சிக்கினா்.

விசாரணையில் அவா்கள், தமிழக காவல்துறையால் ஏ பிளஸ் ரெளடி என அறிவிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நசீப் நகரைச் சோ்ந்த ரா.பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (31), மற்றொருவா் செங்குன்றம் வடகரையைச் சோ்ந்த ரெளடி கு.அப்பு என்ற விக்கிரமாதித்தன் (37) என்பதும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், அந்த காரில் மறைத்து வைத்திருந்த ஒரு கைத்துப்பாக்கி, 14 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டாக் கத்திகள், நாட்டு வெடி குண்டுகள் தயாரிக்க பயன்படும் இரும்பு ஆணிகள், 2 கட்டு மூங்கில் குச்சிகள், நூல் கண்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

கைதான பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு உள்பட 9 வழக்குகளும், அப்பு (எ) விக்கிரமாதித்தன் மீது ஒரு ஆள் கடத்தல் வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பிரகாஷ் தற்போது சென்னை, வியாசா்பாடி, எருக்கஞ்சேரியில் இருந்து, மற்றொரு ரெளடியை கொலை செய்யும் திட்டத்தோடு வந்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT