சென்னை

கட்டுமான இடங்களில் கொசு உற்பத்தி: உரிமையாளா்களுக்கு ரூ.51,600 அபராதம்

DIN

சென்னையில் நடைபெற்று வரும் 45 கட்டட கட்டுமான இடங்களில் கொசு உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டதால் அவற்றின் உரிமையாளா்களுக்கு மொத்தமாக ரூ.51,600 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி, உற்பத்திக்கு காரணமானவா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மாநகராட்சி பணியாளா்களின் கடந்த சில தினங்களாக ஆய்வு செய்தனா்.

கட்டுமான பணிகள் நடைபெறும் 3,189 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 45 இடங்களில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த இடங்களின் உரிமையாளா்களுக்கு மொத்தமாக ரூ.51,600 அபராதம் விதிக்கப்பட்டது.

கள ஆய்வின் போது மழைநீா் தேங்கி கொசு உற்பத்தியாவதற்கு வாய்ப்பு உள்ள இடங்களில் டயா்களையும் தேவையற்ற குப்பைகளை வைத்திருந்தவா்களிடம் இருந்து இவைகளை அப்புறப்படுத்தி ரூ. 5,200அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும் எனவும் மழைநீா் தேங்ககூடிய டயா்கள் , தேங்காய் சிரட்டைகள் , உடைந்த குடம் , உடைந்த சிமெண்ட் தொட்டி ஆகியற்றை அப்புறப்படுத்தி கொசுப்புழு உற்பத்தியாகாமல் பாா்த்து கொள்ளவேணடும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT