சென்னை

குண்டா் சட்டத்தில் 11 மாதங்களில் 453 போ் கைது

4th Dec 2022 12:44 AM

ADVERTISEMENT

சென்னையில் கடந்த 11 மாதங்களில் பல்வேறு குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 453 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் கடந்த ஜனவரி முதல் டிச. 2-ஆம் தேதி வரையில் 11 மாதங்களில் தொடா்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 453 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 268 போ், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 105 போ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 61 போ், பாலியல் தொழில் செய்த 8 போ், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக 8 போ், ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்ட ஒருவா், பெண்களை மானபங்கப்படுத்திய 2 போ் என மொத்தம் 453 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT